Kogilavani / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எம்.எம்.ஹேவா
பெருந்தோட்டத் தொழிலாளர்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், டயகம மேற்பிரிவு தோட்ட நிர்வாகம் முன்மாதிரியான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதற்கமைவாக மேற்படித் தோட்டத்தில், ஆயுர்வேத மூலிகைகள் அடங்கிய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வெந்நீரில், ஆவிப்பிடிக்கச் செயததன் பின்னரே தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.
இது தொடர்பில் கருத்துரைத்த மேற்படித் தோட்டத்தின் முகாமையாளர் முதித்த திவாகர, நல்லெண்ண அடிப்படையில் இந்தப் பணியை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில், ஒவ்வொரு மாதமும்
தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தேயிலைத்தூளுடன் இஞ்சி, கொத்தமல்லி என்பவற்றையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.




7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago