2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

புதிய அரசமைப்பினூடாக ’மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும்’

Editorial   / 2017 நவம்பர் 05 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், மொஹொமட் ஆஸிக்

“புதிய அரசமைப்பினூடாக, மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில், அவர்களுக்கான செலவீனங்களுக்கு, பொதுமக்களிடமிருந்தே வரி அறவிடப்படும். இதனால், பொதுமக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரிக்கின்றது” என்று, மத்திய மாகாண ஊடகவியலாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.

மேலும், “புதிய அரசமைப்பினூடாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அமைச்சுப் பதவிகளை ஒவ்வொருவருக்கும் அதிகரித்து வழங்க வேண்டும். ஆனால், அமைச்சர்களுக்கான சலுகைகளையோ, அமைச்சுகளுக்கானக் கட்டடங்களையோ அதிகரிக்காமல், ஒரே கட்டடத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்” என்றும், அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையின் புதிய அரசமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில், மத்திய மாகாண ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல், கண்டி, டெவோன் விடுதியில், சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திய மாகாண நிரந்தர தொழில் ஊடகவியலாளர் சங்கமும், இன்டர்நீயூஸ் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இந்தக் கலந்துரையாடலில், புதிய அரசமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில், வாத, விவாதங்கள் இடம்பெற்றதுடன், மத்திய மாகாண ஊகவியலாளர்கள், தமது கருத்துகளையும் முன்வைத்தனர்.

இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் கருத்துரைத்த அவர்கள்,

“புதிய அரசமைப்புச் சீர்திருத்தத்தில், இலங்கையில் வாழும் சகல இன மக்களுக்கும் மதத்தவர்களுக்கும் சம உரிமை வழங்கப்படவேண்டும்.

“அமைச்சுப் பதவிகளை வகிப்போரின் உறவினர்கள், அந்த அமைச்சின் அதிகாரிகளாக நியமிக்கப்படக் கூடாது. அமைச்சின் அதிகாரிகளைத் தெரிவுசெய்ய, தனியான சபை உருவாக்கப்பட வேண்டும்.

“தேர்தலில் தோல்வியுற்றவர்களை, மீண்டும் நாடாளுமன்றத்துக்கு உள்வாங்கக் கூடாது. அதேபோல், தற்போதைய அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று, காணி உரிமை, மத்திய அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்தும் இருக்க வேண்டும்” எனவும் கோரக்கையை முன்வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .