Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஒக்டோபர் 26 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கான புதிய தலைவராக இராமன் கோபாலகிருஸ்ணன் வாக்கெடுப்பின்றி இன்று (26) தெரிவு செய்யப்பட்டார்.
ஆளும் கட்சி, எதிர் கட்சியென 15 உறுப்பினர்களை கொண்ட அக்கரப்பத்தனை பிரதேச சபை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வசமுள்ளது.
இந்த நிலையில் கடந்த நான்கரை ஆண்டுகளாக தவிசாளர் பதவியை வகித்த எஸ்.கதிர்செல்வன், இராஜினாமா செய்திருந்தார். இருப்பினும் இவரின் பதவி விலகலை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஜெயலத் என்பவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும், அக்கரப்பத்தனை பிரதேச சபையின் எஞ்சியுள்ள ஆயுள் காலத்திற்கு நிரந்தரமாக தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய கட்டாய நிலையில் இந்த புதிய தவிசாளர் நியமனம் இடம்பெற்றது.
15 உறுப்பினர்களை கொண்ட சபையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளி கட்சியான தொழிலாளர் தேசிய சங்கத்தை சார்ந்த எஸ்.சிவனேஷன், சுதாகர் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை 13 பேர் வாக்களித்தனர்.
4 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago