Editorial / 2024 ஏப்ரல் 29 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன
திகன நகரில் உள்ள மதுபானக் கடைகளுக்கு மேலதிகமாக, மற்றுமொரு மதுபானக் கடை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த பௌத்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் மதுபானக் கடைக்கு முன்பாக கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், திங்கட்கிழமை (29) ஈடுபட்டனர்.
கண்டியில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் மதுபான அனுமதிப்பத்திரத்தை வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அந்த அனுமதி பத்திரத்தின் ஊடாக திகன- மடவளை வீதியிலுள்ள ஓரிடத்தில் மதுபானசாலை திறக்கப்பட்டுள்ளது. அதற்கே எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், மதுக்கடைக்கு ஆதரவாக சிலர் வந்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எவ்வாறாயினும், தெல்தெனிய பல்லேகல மற்றும் மெனிக்கின்ன பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஸ்தலத்துக்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
8 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
15 Dec 2025