Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 மே 02 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த ஒருதொகை அரிசி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்ட சம்பவமொன்று நுவரெலியா-நானுஓயாவில் இடம்பெற்றுள்ளது.
அரிசி விலை கடந்த காலங்களில் அதிகரித்து இருந்தபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக நானுஓயா கிளாசோ தோட்ட நிர்வாகத்தின் ஊடாக 3,000 கிலோ கிராம் அரிசி கொண்டுவரப்பட்டுள்ளது.
அதில், 1,600 கிலோகிராம் அரிசி விற்பனைச் செய்யப்பட்டது. அதற்கிடையில் அரிசியின் விலை ஓரளவுக்கு குறைந்துள்ளது. ஆகையால், மீதமிருந்த 1,400 கிலோகிராம் அரிசி விற்பனைச் செய்யாமல் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.
அரிசி காலவதியானதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியுள்ளது. அதனை அறிந்துகொண்ட தோட்ட நிர்வாகம் அவற்றை கடந்த நாட்களில் குழிதோண்டி புதைத்துள்ளது.
இது தொடர்பில், நானுஓயா பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பிரகாரம், செவ்வாய்க்கிழமை (02) அவை தோண்டி எடுக்கப்பட்டன.
அரிசி இரண்டு ஆண்டுக்கு மேல் ஆனதால் கெட்டுப் போய் அதிக துர்நாற்றம் வீசுவதாகவும் , பரிசோனைக்காக அரிசியின் மாதிரிகளையும் எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். டி சந்ரு
8 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
19 Jul 2025