2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

புதையல் தோண்டிய ஒரு பெண் உட்பட மூவர் கைது

Freelancer   / 2023 மே 21 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

பசறை பிபில வீதி 13 ஆம் கட்டை மெத்தக்கடைக்கு மேல் உள்ள கோவில் ஒன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பு ஹோமாகம பகுதியை சேர்ந்த பூசாரியான 60 வயதுடைய பெண்ணொருவரும் 30 மற்றும் 40 வயதுடைய ஆண்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த காட்டுப்பகுதியில் உள்ள கற்களால் ஆன பழமை வாய்ந்த கோவில் ஒன்றில் புதையல் தோண்டுவதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  E.M.பியரட்னவிற்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில் அவரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் உட்பட பூஜை பொருட்களையும் பசறை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் குறித்த சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சந்தேகநபர்கள் மூவரையும் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர் 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X