Editorial / 2023 மார்ச் 26 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று புத்தர் சிலைகளுடன் வருகைதந்திருந்த பிக்கு உள்ளிட்ட ஏழுவர் கைது செய்யப்பட்டனர். அவர்களை அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலப்பனை, கீர்த்திபண்டாரபுர பொலிஸ் பிரதேசத்தில் புதையல் தோண்ட வருகை தந்திருந்த பௌத்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட ஏழு பேரை கீர்த்திபண்டாரபுர பொலிஸார் சனிக்கிழமை (25) மாலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிக்கு கேகாலையைச் சேர்ந்தவர், காலியைச் சேர்ந்த பெண், மீரிகமயைச் சேர்ந்த ஆண்ணொருவர் அடங்குகின்றனர். ஏனைய நால்வரில் ஒருவர் வலப்பனை கீர்த்திபண்டாரபுர பகுதியைச் சேர்ந்தவர் மற்றைய மூவரும் தம்புள்ளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
அதேநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் வசமிருந்து மூன்று புத்தர் சிலைகள்,புதையல் தோண்டுவதாக பயன்படுத்த கொண்டுவந்த ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக விசாரணைகளை மேற்கொள்ளும் கீர்த்திபண்டாரபுர பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபர்களை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது இப்பிரதேசத்தில் புதையல் தோண்ட வருகை தந்த விடயம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, கைப்பற்றிய பொருட்களுடன் வலப்பனை நீதிமன்ற நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். ஆ.ரமேஸ்.
51 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
15 Jan 2026