2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

புற்களுக்கான கொடுப்பனவைக் கோரி ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2021 நவம்பர் 12 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ்

சாமிமலை ஸ்டொக்கம் தோட்ட தொழிற்சாலை பிரிவு தொழிலாளர்கள் நேற்று (11)  காலை ஒன்பது மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த தோட்டத்தில் தேயிலை மலைகளில் உள்ள புற்களை, சேதனப் பசளை தயாரிப்பதற்காக ஒரு கிலோ புற்களுக்கு
இரண்டு ருபாய் ஜம்பது சதம் வழங்குவதாக கூறிய தோட்ட நிர்வாகம், அந்த கொடுப்பனவை உரிய முறையில் மற்றும் உரிய நேரத்தில் வழங்கப்படாமையினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஒரு கிலோகிராம் புற்கள் இரண்டு ருபாய் ஜம்பது சதத்திற்கு வழங்குவதாக,வாய்மூலமான ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ள பட்ட  போதிலும், குறித்த தோட்ட முகாமையாளர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டாரா அல்லது
வேறு எங்காவது சென்றுள்ளாரா? என்பது தொடர்பில் தமக்கு தெரியாது.

எனவே, தமது மாதாந்த வேதனத்தையும் இந்த ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவையும் யாரிடம் போய் கோருவது என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


குறித்த தோட்ட மக்கள்,  தேயிலை தொழிற்சாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர், ஓல்டன் தோட்ட முகாமையாளர் தலைமையில் ஸ்டொக்கம் தோட்ட தொழிலாளர்களுக்கு இம் மாதத்திற்கான வேதனம் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X