2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

புளியாவத்தையில் வீடுகளை சேதப்படுத்திய மரம்

Editorial   / 2026 ஏப்ரல் 21 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

  செ.தி.பெருமாள்

மலையகத்தில் தற்போது நிலவி வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, டிக்கோயா, புளியாவத்தை பகுதியில் குடியிருப்பு ஒன்றின் மீது பாரிய மரம் முறிந்து விழுந்து சொத்துக்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

புளியாவத்தை ஹென்சி தோட்டத்தில்   பாரிய மரம் ஒன்று, பலத்த காற்றினால் வேரோடு சாய்ந்து அருகிலிருந்த தொழிலாளர் குடியிருப்புகள் மீது நேற்று  (ஏப்ரல் 20) பிற்பகல் 2:30 மணியளவில், விழுந்துள்ளது.

மரம் விழுந்த வேகத்தில் வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

விபத்து நேரிட்ட சமயம் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் எவருக்கும் காயம் அல்லது உயிர் ஆபத்து ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து தோட்ட நிர்வாகத்திற்கும் அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும், விழுந்த மரத்தை அகற்றி வீடுகளைச் சீரமைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .