2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

பூஜாப்பிட்டியவில் தாக்குதல்

Kogilavani   / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளரும் உறுப்பினர் ஒருவரும், பிரதேசசபை வளாகத்தில் வைத்து, நேற்று (7) மாலை, இருவரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் என்று, பூஜாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேற்படி பிரதேசசபைக்கு உட்பட்ட பாதையில், சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட கொங்ரிட் வேலியை அகற்றுவதற்கு பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது தொடர்பில் விசாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட நபர், பிரதேச சபைக்கு வந்தபோதே, சபையின் தவிசாளரையும் உறுப்பினரையும் குறித்த நபர் தாக்கியுள்ளார் என்று தெரியவருகிறது.

தாக்குதலுக்கு உள்ளான உறுப்பினர் கசுன் பண்டாரநாயக்க. தற்போது பொக்காவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X