2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

பூட்டபட்ட மலசலகூடத்தால் பயணிகள் அவதி

Editorial   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

கண்டி - நுவரெலியா பிரதான வீதியில், தவலந்தன்ன பிரதேசத்தில் கொத்மலை பிரதேச சபையின் அனுசரணையில் புதிதாக அமைக்கப்பட்ட மலசலகூடத் தொகுதி பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றமையால், பயணிகள் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

மக்களின் பணத்தில் அமைக்கபட்ட இந்த மலைசலகூடத்தின் சில பாகங்கள் தற்போது உடைந்த நிலையிலும் காணப்படுவதுடன், கவனிப்பார் அற்ற நிலையியே காணப்படுகின்றது.

குறித்த வீதியூடாக, தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பிரயாணிகள், தேநீர் அருந்துவதற்காக, வாகனங்களையும் பஸ்களையும் நிறுத்துவதுண்டு. எனினும், இப்பகுதிக்கு வருவோருக்கான பொதுவான மலசலக்கூடமொன்று இருக்கவில்லை.

இவ்வாறான நிலையில், இந்த மலசலகூடங்கள் அமைக்கப்பட்டமை வரவேற்கதக்கதாக இருந்த போதிலும், மக்கள் பாவிக்க கூடிய வகையில், அது நிர்வகிக்காமை கவலைக்குரியது என, பயணிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த மலசலக்கூடத்தைத் திறந்து, பயணிகளின் பாவனைக்கு ஒப்படைக்க உரிய அதிகாரிகள் முன்வரவேண்டும் என, கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக, கொத்மலை பிரதேச சபைத் தலைவர் சுசந்த ஜயசுந்தரவிடம் வினவியபோது, இந்த மலைசலக் கூடத்துக்குத் தேவையான நீரை வழங்குவதில் சிக்கல் தோன்றியுள்ளதாகவும் தற்போது அதை நிவர்த்தி செய்வதற்கான அனைத்து நவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இந்த மலைசலக் கூடம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .