R.Maheshwary / 2022 மே 24 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
வெட்டிய மரங்களை ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் லொறி (பூம் இயந்திரம்) ஒன்று நேற்று (23) காலை ரதெல்ல -வங்கிஓயா கீழ் பிரிவு தோட்ட வீதியில் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (23) காலை ரதெல்ல தோட்டத்தில் வெட்டிய மரங்களை ஏற்றுவதற்காக, வங்கிஓயா கீழ்பிரிவு தோட்டத்திலிருந்து ரதல்ல நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

4 minute ago
16 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
26 minute ago