2026 ஜனவரி 21, புதன்கிழமை

பெசிலுக்கு செந்தில் வாழ்த்து

Ilango Bharathy   / 2021 ஜூலை 09 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி அமைச்சராக நேற்றைய தினம்(08) பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு, பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் செந்தில் தொண்டமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,  ”அவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில், மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளையும் வேலைத்திட்டங்களையும் சரியாகவும் முறையாகவும் முன்னெடுத்தவர்கள் என்ற பெருமை அவருக்கு உண்டு.

பெசில் ராஜபக்ஷவின் அரசியல் மீள் பிரவேசம், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, அரசாங்கத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரிக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X