Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2023 ஜூலை 06 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி, தேநீர் பருகிக்கொண்டிருந்த போது, மரமொன்று முறிந்து விழுந்தத்தில் அத்தொழிலாளி மரணமடைந்த சம்பவம் வத்தேகம, மடுகலை நெல்லிமலைத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றது.
அவ்விடத்தில் இருந்த மற்றுமொரு தொழிலாளி கால் முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த மரத்தை வெற்றி அகற்றுவதற்காக தோட்ட நிர்வாகத்தினால் நான்கு தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் வீட்டுக்குச் சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான மணிமுத்து இராஜரட்ணம் ( வயது 51) வியாழக்கிழமை (06) மரணமடைந்துள்ளார்.
மரம் விழுந்த சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான, சண்முகம் விஜயலட்சுமி என்பவர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago