2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா - லபுக்கலை கீழ்ப்பிரிவு தோட்டத்தில், இன்று (9) காலை  பெண்ணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

தலை குறுக்காக பிளந்து பலத்த காயங்களுடன் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

லபுக்கலை இலக்கம் இரண்டு லயன் குடியிருப்பில் வசித்துவந்த  பெருமாள் ஜெயலட்சுமி (வயது 56) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மகப்பேற்றுக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மருமகளைப் பார்வையிடுவதற்காக நேற்று (8) மாலை வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார் என்றும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தார் அவரை நேற்று (8) இரவு முழுவதும் தேடியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே குறித்த பெண்,   நுவரெலியா- கண்டி பிரதான வீதி, லபுக்கலை கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள மூடப்பட்ட வீடொன்றுக்கு அருகிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X