2025 மே 08, வியாழக்கிழமை

பெண்ணின் தங்கச்சங்கலியை அபகரித்தவர் கைது

Kogilavani   / 2020 நவம்பர் 05 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, எஸ்.சதிஸ், ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் நகர், மென்டிஸ் மாவத்தை ஊடாக கடந்த 2ஆம் திகதி பயணித்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிய நபரை, ஹட்டன் பொலிஸார் இன்று (5) கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமுற்ற பெண் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துவிட்டு டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், சந்தேக நபரை நேற்று (4) கைதுசெய்துள்ளனர்.  

மஸ்கெலியா காட்மோர் பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். மேற்படி நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X