Gavitha / 2021 மார்ச் 07 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
பெருந்தோட்ட நிர்வாகத்தில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் ஏன் தலையிடுகின்றனர் என்று கேள்வியெழுப்பியுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன், இலங்கை இராணுவ மயமாக்கலை நோக்கி நகர்கின்றதா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
நுவரெலியா, எல்பன் விருந்தகத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நுவரெலியா, ஹல்கரனோயா, மாகுடுகலை பெருந்தோட்ட நிர்வாகத்தில், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் இது, மலையக மக்களின் எதிர்காலத்தில் தேவையற்றப் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
என்றுமே இல்லாத வகையில் இந்தச் செயற்பாடு அமைந்துள்ளது என்றும் இது பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில், மலையக மக்களை அடக்கு முறையில் நிர்வாகமக் செய்வதற்கு, கம்பனிகளும் அரசாங்கமும் திரை மறைவில் செயற்பட்டு வருகின்றதா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
இன்று, இலங்கையில் அனைத்து அரசாங்க, தனியார் துறைகளிலும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் இணைக்கப்பட்டு வருகின்றார்கள் என்றும் இது அரசாங்கத்தின் திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறுகின்றது என்றும் தெரிவித்த அவர், இதையே, அரசாங்கத்தின் அணுசரனையுடன் கம்பனிகள் முன்னெடுப்பதற்கு தயாராகி வருகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
“நுவரெலியா ஹல்கரனோயா மாகுடுகலை பெருந்தோட்ட நிர்வாகத்தில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் 7 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இன்று மலையகத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் பல இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு, இந்தத் தோட்ட கம்பனிகள் வேலைவாய்ப்புகளை வழங்க முன்வருவதில்லை. அனுபவம் இல்லை என்பதாலேயே, இவர்களுக்கு வேலைவழங்கவில்லை என்று கம்பனிகள் தெரிவிக்கின்றன. அப்படியாயின், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு, பெருந்தோட்ட நிர்வாகத்தில் என்ன அனுபவம் இருக்கின்றது” என்று அவர் கேள்வியெழுப்பினார்.
ஒரு பக்கத்தில், தோட்ட அதிகாரிகள் தங்கள் பாதுகாப்புக்காக அரசாங்கம் துப்பாக்கிகளை பெற்றுத் தர வேண்டும் என்று போராட்டம் செய்கின்றார்கள் என்றும் மறுபுறத்தில் தோட்ட நிர்வாகத்துக்கு ஓய்வு பெற்ற இராணுவத்தினர் இணைக்கப்படுகின்றனர் என்றும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.
26 minute ago
36 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
45 minute ago