2025 ஜூலை 23, புதன்கிழமை

பெருந்தோட்டங்களில் இரைப்பைப் புற்றுநோய்

Editorial   / 2017 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், இரைப்பைப் புற்றுநோய்க்கு இலக்காகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.  

மலையகத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் புள்ளிவிவரவியல் தரவுகளை அடிப்படையாக வைத்துப்பார்க்கும் போதே, மேற்படி விவரம் வெளியாகியுள்ளதென,

சிறுநீரக நோய் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ளும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வைத்தியப் பீட பேராசிரியர் ஜயந்த ஜயசுமன தெரிவித்தார்.  

மலைநாட்டில், பெருந்தோட்ட மக்கள் வாழ்க்கின்ற மக்கள், சிகிச்சை பெற்றுக்கொள்கின்ற வைத்தியசாலைகளான நுவரெலியா, டிக்கோயா, நாவலப்பிட்டிய, பதுளை மற்றும் கண்டி ஆகிய வைத்தியசாலைகளில், பெற்றுக்கொள்ளப்பட்ட கடந்த 10 வருடங்களுக்கான புள்ளிவிவரங்களை ஆராயும் போதே மேற்படி விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .