Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 24 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
பெருந்தோட்ட மக்களின் சுகாதாரத்துறையை மேம்படுத்த வேண்டுமெனின், பெருந்தோட்டப்பகுதி கல்வி முறை தேசிய மயமாக்கப்பட்டதைப் போன்று, சுகாதாரத்துறையும் தேசிய மயமாக்கப்பட வேண்டுமென, கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.பி.சிவபிரகாசம் தெரிவித்தார்.
பெருந்தோட்ட மக்களின் சுகாதாரத்துறை தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
"பெருந்தோட்டத் துறையின் தரக்குறைவான சுகாதார நிலை, காலனித்துவ யுகம் தொடக்கம், தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்டது வரை முன்னேற்றகரமில்லாத நிலைமையில் காணப்படுகின்றது. இதன் காரணமாக, பாரிய சுகாதாரப் பிரச்சினைகளை, பெருந்தோட்ட மக்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றனர்" என, அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "தேசிய மயமாக்கப்பட்ட பெருந்தோட்டக் கல்வித் துறையைப் போன்று, பெருந்தோட்டத் துறையின் மருத்துவ சுகாதாரத்துறையையும் தேசிய நீரோட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு, நீண்ட காலமாக சுகாதாரத் துறையில் புறம் தள்ளப்பட்டுள்ள பெருந்தோட்டச் சமூகத்தினரை தேசிய சுகாதார சேவையில் இணைத்து, அவர்கள் எதிர்நோக்கும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு, அவர்களின் நீண்டகாலக் கனவை நனவாக்க வேண்டும்.என அவர் மேலும் கோரியுள்ளார்.
தொடர்ந்து அவர் "நாட்டில் தேசிய சுகாதார சேவையிலிருந்து புறம் தள்ளப்பட்டுள்ள தோட்டச் சமூகம்இ இதுவரை காலமும் தோட்டப்பகுதிகளை நிர்வகிக்கும் கம்பனிகள்இ தனியார் தோட்ட நிறுவனங்கள்இ அரச தோட்ட நடத்துநர்கள்இ அபிவிருத்திச் சபை போன்றவர்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் தரம் குறைவான சுகாதார சேவையில் அகப்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
"கடந்த கால அரசாங்கங்கள் பெருந்தோட்டச் சமூகத்தினரின் பின்தங்கிய அடிப்படை வசதிகளை உயர்த்துவதற்காக முயற்சிகளை கொண்டிருந்தாலும், அது முழுமையடையவில்லை எனக் குறிப்பிட்ட அவர், பெருந்தோட்டச் சுகாதாரத் துறையை தேசிய மயப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஆதரவான யோசனைகளையும் கருத்துகளையும், இம்மக்களின் நலன் கருதி, அக்கறையுடன் அரசாங்கத்துக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கும் தாபனத்தால் முன்னெடுக்கப்பட்ட புள்ளி விவரம், தகவலுடன் முன்வைக்கும்." எனவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago