Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 02 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதிலும் பார்க்க, யார் அதனைப் பெற்றுக்கொடுக்கப் போகின்றார்கள் என்பதிலேயே, தோட்டத் தொழிலாளர்களின் தலைமைகள், கண்ணும் கருத்துமாக இருப்பது போல் தெரிவதாக, வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன் விமர்சித்துள்ளார்.
மலையக மக்கள் தொடர்பில், தனது வாராந்த கேள்வி, பதிலில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர், இன்று யாழ்ப்பாணத்தில், 1,200 ரூபாய் நாள் கூலிக்குக் குறைவாக, ஒருவரைப் பணிக்கு அமர்த்த முடியாது என்றும் அதுவும் காலை, மதிய தேநீர் நேரத்தையும் பகல் போசன வேளையையும் முன்னிலைப்படுத்தியே இவர்கள் பணிக்கு வருவதாகவும் தெரிவித்தார்.
எந்தத் தொழிலாக இருந்தாலும் கூட குறைவான வேலையையே செய்வார்களென்றும் வேலைகளை இழுத்தடிப்பார்கள் என்றும் விமர்சித்த அவர், ஆனால், 1,200 ரூபாய்க்குக் குறைவாக ஒருவரை பணிக்கு அமர்த்துவது கடினம் என்றும் தெரிவித்தார்.
எனினும், தோட்டத் தொழிலாளர்கள், அதிகாலையில் எழுந்து, பனியில் நனைந்து, பலவித ஜந்துக்களால் தாக்கப்பட்டு, குறிப்பிட்ட அளவு கொழுந்துகளையேனும் பறிக்கவேண்டிய கடப்பாட்டுக்குக் கட்டுப்பட்டு, அவற்றைப் பறிப்பதும் அவற்றைக் கொண்டுச் சென்று ஆலையில் சேர்ப்பதுமாக, முழு நாழும் வேலையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு முழுச் சம்பளமும் கிடைக்கக்கூடாது என்பதற்காக, தோட்ட நிர்வாகம், வேலை நாள்களைக் குறைத்துவிடுவதாகவும் இதையும் ஏற்று, அவர்களுக்கு தற்போது கிடைக்கும் ஒரு நாள் சம்பளத்தை வைத்து பலவற்றையும் சமாளிக்க வேண்டியுள்ளதாகவும் சாடினார்.
தொழிலாளர்களின் சம்பளத்தில், ஒரு தொகை தொழிற்சங்கங்களுக்கு சந்தாப் பணமாகக் கட்டப்படுகிறதெனவும், எனினும், தொழிலாளர்கள் கண்ட மிச்சம் அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தமது ஆணவப் போர்களில் ஈடுபட்டு வருவதாகவும் விமர்சித்தார்.
“அரசியல் முரண்பாடுகளில் உழன்று கொண்டு இருக்கின்றார்கள். மலையகக் கட்சிகள் பலவற்றின் தலைவர்கள் என் அன்புக்குரியவர்கள். ஆனால், அவர்களின் ஒற்றுமையற்ற செயற்பாடுகள் எம் மனதை வருத்துகின்றது” என்றார்.
எனவே, சகல கட்சிகளின் தலைவர்களும் ஒன்று சேர்ந்து, தமது மக்கள் நலத்தை முன்னிட்டு தோட்ட முதலாளிமார்களுடனும் அரசாங்கப் பிரதிநிதிகளுடனும் பேச வேண்டும் எனவும் அல்லது அனைவரும் சேர்ந்து ஒரு சிரேஸ்ட சட்டத்தரணியைப் பேச விட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago