Gavitha / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட தொழிலாளர்கள், பொது சேவைகளிலுள்ள சிற்றூழியர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்களில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையிலேலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, பாராளுமன்ற உறுப்பினர் என்ற வரப்பிரசாதத்தில், தடுப்பூசியை பெறுவதை விட, எமது மாவட்ட மக்களோடு சேர்ந்து தடுப்பூசியை பெறுவதே நியாயமாது எனத் தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்பொழுது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தத் தடுப்பூசியைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தங்களது வயதெல்லை மற்றும் உடல் நிலை என்பவற்றை கருத்திற்கொண்டு பல உறுப்பினர்கள் இவ்வசதியை பயன்படுத்தியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதில் தவறில்லை என்றாலும், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் பொது பணியில் உள்ள சிற்றூழியர்களுக்கும் இந்தத் தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது, கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்களில், சிக்கலான நிலைமை தோன்றியுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திலும் முன்மொழியப்பட்ட தடுப்பூசி வழங்களுக்கான நிகழ்ச்சித்திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வித திட்டமிடலும் இன்றி ஒழுங்கற்ற வகையிலே இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது என்றும் ஒருவர் தடுப்பூசியை பெறுவதற்கான அடிப்படை என்ன, அதை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறை என்ன, அதுதெடர்பாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக எவ்வித முறையான தெளிவுபடுத்தலும் இல்லாமல் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற மக்களும் லயன் அறைகளில் மிக நெருக்கமாக வாழ்ந்து வருகின்றனர் என்றும் அவர்களுக்கான சுகாதார வசதிகளும் மிக கீழ்மட்டத்திலேயே உள்ளது என்றும் தெரிவித்த அவர், தோட்டத் தொழிலாளர்கள், தொடர்ச்சியாக தொழிலிலே ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago