Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஜூலை 15 , பி.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள லெமன் மோரா தோட்டத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்புக்காண சுமார் 3 இலட்சம் பெறுமதி வாய்ந்த கம்பிகள் களவாடப்பட்டு உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் ,
2017 ம் ஆண்டு காலப் பகுதியில் மஸ்கெலியா லெமன் மோரா தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட பால் பண்ணைக்கு மின் இணைப்பு வழங்க "3"பேஸ் கம்பிகள் மூலம் ஹப்புகஸ்தனை தேயிலை தொழிற்சாலையில் இருந்து லெமன் மோரா தோட்டத்தில் இயங்கிய பால் பண்ணைக்கு கம்பிகளினால் இணைப்பு கொண்டு செல்லப்பட்ட போது அங்கு பண்ணையில் இருந்த பசுக்கள் மரணித்ததால் மின் இணைப்பு வழங்காமல் கம்பிகள் இழுத்துச் செல்லப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஐந்து வருடங்களாவதால் அப் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த மின் கம்பிகள் இடை இடையே வெட்டி அகற்றப்பட்டதை மாகாண மின் அதிகாரி தினுக்க நிரோஜன் பண்டார நேரடியாக வந்து பார்வையிட்டார்.
பின்னர் சுமார் மூன்று லட்சம் ரூபாய் பெறுமதியான கம்பிகள் களவாடப்பட்டு உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். இது குறித்து மஸ்கெலியா பொலிஸ்சார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago