Editorial / 2019 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியால் களமிறக்கப்படும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான தீர்மானம் எடுப்பதற்கு, எதிர்வரும் வாரம் முதல், பல கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதற்காக, மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் மருதபாண்டி ராமேஷ்வரன், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, மலையக மக்களின் முன்னேற்றம் குறித்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என்றும் பல கட்சிகளிடமிருந்து, அழைப்புகள் பெறப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
3 minute ago
42 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
42 minute ago
9 hours ago