Kogilavani / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்கள், பெருந்தோட்ட கம்பணி மற்றும் அரச தரப்பினர் அடங்களான முத்தரப்பு பேச்சுவார்த்தை, இன்று(8) 2.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
தொழில் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவின் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை சம்பள நிர்ணையச் சபையில் இடம்பெறவுள்ளது.
தொழிற்சங்க தரப்பில் 8 பேரும் கம்பனிகள் தரப்பில் 8 பேரும் அரசாங்கத் தரப்பில் மூவருமாக இப்பேச்சுவார்த்தையில் 19 பேர் கலந்துகொள்ள உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தை முதற்கட்ட பேச்சுவார்த்தை என்பதால் கம்பனிகள் தரப்பிலும் தொழிற்சங்கத் தரப்பிலும் சம்பள நிர்ணையச் சபைக்கு கோரிக்கை அடங்கிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இருப்பினும் சம்பள நிர்ணையச் சபையில், இன்று இடம்பெறும் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரண்டு வாரங்களில் சம்பள உயர்வு தொடர்பான முடிவு அறிவிப்பாக விடுக்கப்படுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
18 minute ago
19 minute ago
23 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
19 minute ago
23 minute ago
30 minute ago