2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பேரனின் தாக்குதலில் தாத்தாவும் பாட்டியும் மரணம்

Freelancer   / 2023 ஏப்ரல் 05 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவநிவச நாவலகம பல்லகெடுவ பகுதியில் நேற்று இரவு பேரனின் தாக்குதலுக்கு இலக்காகிய 80 வயதுடைய தாத்தாவும், 70 வயதுடைய பாட்டியும் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான தாத்தாவும் பாட்டியும் தெமோதர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, தாத்தா தெமோதர வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும், 70 வயதுடைய பாட்டி மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் சந்தேகநபரான பேரன் தலைமறைவாகி உள்ளதாக பல்லகெடுவ பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பல்லகெடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

குறித்த பேரன் போதைவஸ்து பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X