R.Tharaniya / 2025 டிசெம்பர் 09 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேராதனை தேசிய தாவரவியல் பூங்காவை சுற்றியுள்ள மகாவலி கங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பூங்காவின் சில பகுதிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், பூங்கா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்துள்ளது.
என தாவரவியல் பூங்காவின் பிரதி பணிப்பாளர் திருமதி. ருவினி கோமஸ் தெரிவித்துள்ளார்.மகாவலி கங்கையின் நீர் மூன்று பக்கங்களிலிருந்தும் பூங்காவிற்குள் நுழைந்ததால்,உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த சங்கிலிப் பாலத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
பாலத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு (restoration) தோராயமாக 80 மில்லியன் ரூபா செலவாகும் என ஆரம்ப மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சேதம் ஏற்படுவதற்கு முன்னரும் கூட, பாலத்தில் பயணிக்க வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான அவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
சேதம் ஏற்பட்ட பின்னர், அரசாங்கத்தின் கைத்தொழில் திணைக்களம் கடந்த 7ம் திகதி சென்று பாலத்தின் நிலையைச் சரி பார்த்துள்ளது.உயர்தர தாவரக் கண்காட்சிப் பிரிவிற்கும், விற்பனைப் பிரிவிற்கும் செடிகளை வழங்கும் உயர்தர தாவர (Orchid) நாற்றுமேடை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால், அங்கு காணப்பட்ட சுமார் 12,500 செடிகள் அழிவுக்குள்ளாகும் அபாயத்தில் உள்ளன. மகாவலி கங்கை அருகில் அமைந்திருந்த,உயர்தர தாவர நாற்றுமேடை க்கு செடிகளை வழங்கும் திசு வளர்ப்பு ஆய்வகம் (Tissue CultureLaboratory) சேதமடைந்துள்ளது.
இந்த ஆய்வகத்தில் பாதிக்கப்பட்ட தாவரங்களை மீட்டல், புதிய பரிசோதனைகள் உட்பட விசேட திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆய்வகத்திற்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு இன்னும் கணக்கிடப்படவில்லை.
வெள்ளத்தில் மூழ்கிய உபகரணங்களை மீண்டும் பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பில் உறுதியான எதையும் கூற முடியாது என உதவிப் பணிப்பாளர் திருமதி. ருமாலி பண்டார தெரிவித்துள்ளார்.மகாவலி கங்கை அருகில் உள்ள பூங்காவின் அனைத்து வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியதால்,மூன்று முதல் நான்கு அடி உயரத்திற்கு சேறு (silt) படிந்துள்ளது.
இந்த சேற்றை அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சுமார் இரண்டு வாரங்களுக்குள் தாவரவியல் பூங்காவை அதன் முந்தைய நிலைக்கு கொண்டு வர முடியும் என திருமதி. ருவினி கோமஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பூங்காவிற்குள் பயணிப்பதற்காக பயன்படுத்தப்படும் மின்சார மோட்டார் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அவற்றை திருத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.


எம்.ஏ.அமீனுல்லா
16 minute ago
36 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
36 minute ago
45 minute ago