Janu / 2024 ஜூன் 23 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் - அவிசாவளை வீதியில் கினிகத்ஹேன கடவல பகுதியில் வைத்து அரச பேருந்தொன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (23) காலை இடம்பெற்றதாக கினிகத்ஹேன பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பஸ் ஒன்றும், ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளானதுடன், லொறியின் சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கினிகத்ஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


5 minute ago
16 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
1 hours ago
2 hours ago