2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பேருந்தும் காரும் மோதியதில் இருவர் காயம்

Janu   / 2025 நவம்பர் 24 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி, ரொசெல்லா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வட்டவளை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கொழும்பிலிருந்து ஹட்டன் வழியாக ராவணகொட நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்துடன் மோதியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.  

விபத்தில் காயமடைந்த இருவரின் நிலை மோசமாக இல்லை என  மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார்   மேற்கொண்டு வருகின்றனர்.

  எஸ். சதீஷ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X