2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

’பொகவந்தலாவ, ஹட்டனில் மரணித்த பெண்களுக்கு தொற்று இல்லை’

Kogilavani   / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

32 குடும்பங்கள் தனிமையில்
மரணித்த இருவருக்கும் தொற்று இல்லை
சென்மேரிஸ் வித்தியாலயத்தில் ஒரு வகுப்பறைக்குப் பூட்டு

11 மாணவர்கள், ஆறு ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலில்

எம்.கிருஸ்ணா, எஸ்.சதிஸ்

பொகவந்தலாவை பொது சுகாதர காரியாலயத்துக்கு உட்பட்ட பொகவந்தலாவை நகர் மற்றும் குயினா தோட்டப் பகுதிகளில், ஆறு கொரோனா தொற்றாளர்கள் இன்று (1) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பொகவந்தலாவைப் பகுதியில் இதுவரை 20  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்  32 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குயினா தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 09,13,34,64,75 ஆகிய வயதுகளையுடைய ஐவரும் பொகவந்தலாவை நகரில் 41 வயது நபருக்குமே தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

இதனையடுத்து குயினா தோட்டம் முழுவதும் நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேலின் பணிப்புரைக்கு அமைவாக தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலும் பொகவந்தலாவை நகரில் அடையாளம் காணப்பட்ட வர்த்தகரின் மகன் கல்வி பயிலும் சென்மேரிஸ் கல்லூரியின் தரம் எட்டு வகுப்பும் மூடப்பட்டுள்ளது.
மேற்படி மாணவன் 23,24,25 திகதிகளில் பாடசாலைக்கு சென்றுள்ளமையால்,  தரம் எட்டு வகுப்பறையை மூடுவதற்கு சுகாதர பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

அத்துடன், குறித்த  தினங்களில், தரம் 08 வகுப்புக்கு வந்த 11 மாணவர்கள், கற்பித்தலில் ஈடுபட்ட ஆறு ஆசிரியர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஹட்டன் டன்பார் தோட்டத்தில், நேற்று முன்தினம்  உயிரிழந்த 79 வயது பெண்ணுக்கும்  பொகவந்தலாவை கெம்பியன் தோட்டத்தில் உயிரிழந்த 67 வயது பெண்ணுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது பிசிஆர் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X