2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பொகவந்தலாவை சேர்ந்த 7 பேருக்கு நூரளையில் விளக்கமறியல்

Editorial   / 2023 மார்ச் 24 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

ஹைபொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாகுடுகலை அப்பில் பாம் (சிரச வன பகுதி) என அழைக்கப்படும் இலக்கம் 03 இயற்கை வனத்தில் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த 7 பேரை விளக்க மறியலில் வைக்குமாறு வலப்பனை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சந்தேக நபர்களை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் (04)ஆம் திகதி செவ்வாய் கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு வலப்பனை நீதிமன்ற நீதவான் எஸ்.எஸ்.விக்கிரமசிங்க (23) மாலை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொகவந்தலாவை பிரதேசத்திலிருந்து கடந்த  (21) அன்று இரவு எட்டு பேர் கொண்ட குழு வேன் ஒன்றில் வருகைதந்து மாகுடுகலை அப்பில் பாம் (சிரச) வனப்பகுதியில் மாணிக்ககல் தோன்றியெடுக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது  அங்கு பாரிய குழி ஓன்றை தோண்டி  இருவர் மாணிக்கக்கல் அகழும் போது மண்மேடுடன்  பாரிய கல் ஒன்று சரிந்து விழுந்து இதில் பொகவந்தலாவ குயினா  தோட்டத்தை சேர்ந்த அம்மாசி விஜயகுமார் வயது (40) என்பவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பேரை கைது செய்த மாகுடுகலை வன இலாகா அதிகாரிகள் சந்தேக நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து (23) மாலை வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதன்போது வழக்கை விசாரணைக்காக எடுத்துக் கொண்ட நீதவான் சந்தேக நபர்களை ஏப்பிரல் மாதம் (04.04.2023) வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

அதேநேரத்தில் சம்பவத்தில் உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை நுவரெலியா மாவட்ட சட்ட வைத்தியர் ஒருவரின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .