Janu / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையிலிருந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள நோர்வூட் வென்ச்சர் தோட்ட பகுதியில் வியாழக்கிழமை (18) காலை 11 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
ஆம்புலன்ஸில் இருந்த இரண்டு நோயாளிகளும் உடனடியாக வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸின் பின் சக்கரம் எதிர் திசையில் வந்த பொலேரோ லொறியின் முன் சக்கரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago