2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பொகவந்தலாவையில் இருவருக்கு கொரோனா

Kogilavani   / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

பொகவந்தலாவ சீனாகலை, பூசாரி தோட்டப் பகுதியில், ஆசிரியர் ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று  (6) மாலை வெளியான பிசிஆர் பரிசோதனை முடிவுகளுக்கு அமைவாகவே, இருவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

மேற்படிப் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த வியாழக்கிழமை (4) ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்தினருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே மேற்படி நபரின் மனைவி, மகனுக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நபர், பொகவந்தலாவையிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியராகக் கடமையாற்றி வருவதுடன், தரம் 7, 9, 10 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளதோடு தரம்-09 வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு பரீட்சை ஒன்றையும் நடத்தியுள்ளார் என்று, பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர்களின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மேற்படி வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மேற்படிப் பாடசாலையை மூடுவது தொடர்பிலும் பாடசாலை நிர்வாகத்தோடு கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பைப் பேணிய சுமார் 30க்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X