2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பொகவான தோட்டத்துக்கு குடிநீர் திட்டம்

Kogilavani   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கிணங்க, உலக வங்கியின் 30 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில், பொகவான லின்ஸ்டட் தோட்ட மக்களுக்கு, குடிநீர் திட்டம் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது.

நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படவுள்ள கிராமிய நீர் வழங்கல் திட்டத்தின் நிர்மாணப் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .