Freelancer / 2023 மார்ச் 26 , பி.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவங்ச
சந்தைகளில் இருக்கும் பொதி செய்யப்பட்ட உள்ளூர் அரிசி பக்கற்றுகளில் நிகர எடை இல்லை என்பது சோதனைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பதுளை மாவட்ட அளவீட்டு அளவுகள் சேவை உதவி அதிகாரி துலித் அசோக தடல்கே தெரிவித்தார்.
பதுளையில் உள்ள அங்காடிகள் மற்றும் கடைகளில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே நிகர எடை இல்லாமல் பொதி செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், அடுத்த சுற்றிவளைப்பின் போது நிறைகுறைந்த பொதிகள் கண்டறியப்படுமாக இருக்குமாயின் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அறிவுறுத்தியுள்ளார்.
எனினும், உள்ளூர் அரிசி பக்கற்றுகளில் இவ்வாறான குறைப்பாடுகள் காணப்பட்ட போதிலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிச் செய்யப்பட்ட பொதிகள், பக்கற்றுகளில் நிகர எடை இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
9 minute ago
36 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
36 minute ago
57 minute ago
1 hours ago