2025 ஜூலை 30, புதன்கிழமை

பொது சுகாதார பரிசோதகர் மீதுத் தாக்குதல்; கண்டித்து ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2017 ஜூலை 14 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணஸ்ரீ

இரத்தினபுரி நகரில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரத்தினபுரி மாநகர சபையின் பொதுசுகாதார பரிசோதகர் ஒருவர் தாக்கபட்டமையைக் கண்டித்து,  இரத்தினபுரி மாநகரசபை ஊழியர்கள், மாநகர சபைக்கு முன்பாக, இன்றுக் காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இரத்தினபுரி நகரில், டெங்கு ஒழிப்பு கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரத்தினபுரி மாநகர சபையின் சுகாதார பரிசோதகர் ஒருவருக்கும் இரத்தினபுரி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சேவையாளர் ஒருவருக்கும் இடையில், நேற்று(14) வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன், அது பின்னர் கைகலப்பில் முடிந்தது.

இதனால், காயமடைந்த  இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைக் கண்டித்தே, இரத்தினபுரி மாநகர சபையில் கடமையாற்றும் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களும் ஒன்றிணைந்து,  இரத்தினபுரி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முன்பாக, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“சுகாதார பரிசோதகரை தாக்கியவரை, சட்டத்தின் முன்நிறுத்தி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்? அதிகாரிகளை தாக்குவதை நிறுத்து?” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வார்ப்பாட்டம் காரணமாக, இரத்தினபுரி வீதியில் போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .