2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

பொது சுகாதார பரிசோதிகரை அச்சுறுத்தியவர் கைது

Editorial   / 2020 மே 01 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தேகம பொது சுகாதார பரிசோதகரை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை, பத்தேகம பொலிஸார், நேற்று (1) கைதுசெய்துள்ளனர்.

பட்டபொல கஹட்டபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது நபர் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் தந்தை, பழுதடைந்த மீன்களை விற்பனைச் செய்து வந்த நிலையில், குறித்த மீன் விற்பனை நிலையத்தில் திடீர் சோதனைகளை மேற்கொண்ட பொது சுகாதார பரிசோதகர்கள், மீன் விற்பனை நிலையத்திலிருந்த சுமார் 17 கிலோகிராம் மீன்களை அழித்தனர். 

இதனால் ஆத்திரமடைந்த குறித்த நபரின் மகன், பொது சுகாதார அதிகாரிகள் காரியாலயத்துக்குச் சென்று முறையற்ற விதத்தில் நடந்துகொண்டுள்ளதுடன், பொது சுகாதார பரிசோதகரை அச்சுறுத்தியுள்ளார். 

இது தொடர்பில் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .