2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

பொது மக்களை பாதுகாக்க அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம் 

கடந்த மூன்று தினங்களுக்குள் ஹட்டன் தலவாக்கலை, கொட்டகலை உள்ளிட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு அடுப்புகள் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இன்று (01)  ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர்,

ஆகவே இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதனை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

மலையகத்தைப்  பொறுத்த வரையில் பெரும்பாலான மக்கள் தொடர் குடியிருப்புக்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான ஒரு சூழ் நிலையில் இவ்வாறு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டால் முழு தொடர் குடியிருப்பினையே அது அழித்து விடும் .ஆகவே இவ்வாறான சம்பவங்கள் மக்களை அச்சுறுத்துவதாகவே அமைந்துள்ளன.


எனவே, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் இம்மக்களினை பாதுகாக்க கூடிய அக்கறை செலுத்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X