2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது ​கோபம் கொள்கின்றனர்

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நாட்டினதும், அரசாங்கத்தினதும் உண்மையான நிலைமையை  மக்களுக்கு எடுத்துரைக்க தவறுவதால் தான், பொது மக்கள் அரசாங்கத்தின் மீது கோபம் கொள்கின்றனர் என வனங்கள் மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

ஹைபொரஸ்ட் மூன்றாம் பிரிவு நகரில் நிர்மானிக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்க கிராமிய வங்கியின் புதிய கட்டடத்தை நேற்று (04) மதியம் திறந்து வைத்து அமைச்சர் உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

நாடு கொரோனா பேரிடர் தொற்றுக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டு வர போராடிவரும் இக்காலப்பகுதியில், விவசாயிகளுக்கான உரப்பிரச்சினை,இயற்கையின் சீற்றம்,உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் மக்கள் முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

 

அதுமட்டுமல்லாது  அரசாங்கத்தையும்,நாட்டையும் முன்னெடுத்துச்செல்ல பொருளாதார தட்டுப்பாடு நிலவும் நிலையில் பொருட்களின் விலைகளும் உயர்வு கண்டுள்ளதுடன் இப்போது சமையல் எறிவாயு சிலிண்டர்களும் வெடிக்க ஆரம்பித்துள்ளன.

அதேநேரத்தில் நாட்டில் எத்தகைய இடர்கள் வந்தாலும் மக்களுக்கான சேவையில் கூட்டுறவு சங்கங்கள் அதன் உண்ணதமான சேவையை செய்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. 

அதேநேரத்தில் நாடு மற்றும் அரசாங்கம் முகம் கொடுத்து வரும் பொருளாதார சிக்கல் நிலை மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் மக்களுக்கு உண்மை தன்மையை தெரியப்படுத்த தவறும் பட்சத்தில் மக்கள் அரசாங்கத்தின் மீது கோபம் கொள்கின்றனர்.

ஆகையால், மக்கள் நாட்டில் நிலவும் உண்மைகளை அறிந்து மக்கள் தெளிவு பெற்று செயற்படும் போதே, அரசாங்கம் மீது காட்டும் கோபம் நியாயமற்றது என்பதை உணர முடியும் என மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X