2025 மே 03, சனிக்கிழமை

பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் அனுர பெர்ணான்டோ மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் இணைந்து, இன்று (16), பூஜாப்பிட்டிய நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

பூஜாபிட்டிய பிரதேசத்தில், சட்ட விரோதமான முறையில் பாதை ஒன்றுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கொங்கிரீட் வேலி ஒன்றை அகற்றுவதற்கு எடுத்த முயற்சியில், பிரதேச சபையின் தலைவரும் உறுப்பினர் ஒருவரும் தாக்குதலுக்கு உள்ளாகினர் என்றும் தாக்குதல் நடத்திய நபருக்கு எதிராக பூஜாபிட்டிய பொலிஸார் சரியான முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸார், சரியான முறையில் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

எனினும், சந்தேக நபர்களை கைது செய்து, நீதிமன்றத்தில ஆஜர்படுத்தி, சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X