2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பொலிஸார் கௌரவிப்பு

Kogilavani   / 2017 நவம்பர் 05 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

தீபாவளி பண்டிகைக் காலத்தில் ஹட்டன், டிக்கோயா நகர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையை சிறப்பாக முன்னெடுத்த ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகளைப் பாராட்டும் நிகழ்வு, டிக்கோயா நகரசபை மண்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஹட்டன் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், ஹட்டன் பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டீ.டீ ஆர். தசநாயக்க, ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டர் இ.எ.பி.எஸ் வீரசேகர உட்பட ஹட்டன் தனியார் பஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டு, சிறப்பாகச் சேவையாற்றிய பொலிஸ் அதிகாரிகளுக்கு, நினைவுப் பரிசில்களை வழங்கிக் கௌரவித்தனர்.

சங்கத்தின் தலைவர் ஜெயசூரிய தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஹட்டன் தனியார் பஸ் உரிமையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .