2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் நிலையத்தைத் தாக்கியோருக்கு விளக்கமறியல்

எம். செல்வராஜா   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமம் பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டமை தொடர்பாக, மூன்று மாதகாலமாகத் தேடப்பட்டு வந்த கதிர்காமம் பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட மூவர், திஸ்ஸமகாராமை நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் உதயங்கனி ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (24) ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 2ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.

இவ்வாண்டு ஜனவரி 21ஆம் திகதி இரவு, கதிர்காமத்தைச் சேர்ந்த பத்திரனகே நிரோசன் என்பவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதோடு, ஸ்தலத்திலேயே அவர் பலியாகியிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரதேச மக்கள், கதிர்காமம் பொலிஸ் நிலையத்தைத் தாக்கியதுடன், பொலிஸாருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதோடு, ஒரு கட்டத்தில் அவ்வெதிர்ப்பு, வன்முறையாகவும் மாற்றமடைந்திருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X