2026 ஜனவரி 21, புதன்கிழமை

பொலிஸ் நிலையமாக மாறிய சோதனைச் சாவடி

Ilango Bharathy   / 2021 ஜூன் 28 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. மஹிந்தகுமார், ஏ.ஏ.எம்.பாயிஸ், சிவாணி ஸ்ரீ

பலாங்கொட தேர்தல் தொகுதியில் 35 வருடங்களாக சோதனைச் சாவடியாக காணப்பட்ட
சமனலவெவ பொலிஸ் சோதனைச் சாவடியானது,  நிரந்தர பொலிஸ் நிலையமாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவயால் நேற்று முன்தினம் (26) திறந்து வைக்கப்பட்டது.

சமனலவாவி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட போது, இதன் பாதுகாப்புக்காக குறித்த இடத்தில்
அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியே, இவ்வாறு நிரந்தர பொலிஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி வலேபொட, அகில சாலிய எல்லாவல உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல தேர்தல் தொகுதியின் எந்தானை
பிரதேசத்திலும் புதிதாக பொலிஸ் நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X