Janu / 2023 ஜூலை 19 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தியத்தலாவ பொலிஸ் நிலையத்தின் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் புதன்கிழமை (19) அதிகாலை திருடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தியத்தலாவை நகரில் செவ்வாய்க்கிழமை (18) இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கைது செய்த உப பொலிஸ் பரிசோதகர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கைது செய்யப்பட்ட நபரின் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றுள்ளார்.
பின்னர் மோட்டார் சைக்கிளை எடுக்க சென்ற போது மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்ட இடத்தில் காணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தியத்தலாவ கல்கந்த பிரதேசத்தில் உள்ள பைனஸ் காட்டு பகுதியில் எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் தியத்தலாவ பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ராமு தனராஜா

36 minute ago
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
47 minute ago
2 hours ago
2 hours ago