Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 02 , மு.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
உமாமகேஸ்வரி
இயற்கை அனர்த்தங்களை தடுக்க முடியாது உலக நாடுகள் பல சவால்களையும் பல அழிவுகளையும் சந்தித்து வருகின்றன. என இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரட்ன கூறினார்.
இலங்கை உட்பட பல உலக நாடுகள் அவ்வப்போது இடம் பெறும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பல்வேறு அழிவுகளையும் சேதங்களையும் சந்தித்து வருகின்றன. இந்த இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு பிரதான காரணம் மனிதர்களுடைய இயற்கைக்கு எதிரான செயற்பாடுகள் ஆகும் என்றார்.
இரத்தினபுரி மாவட்ட இடர் அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில் இரத்தினபுரி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கொன்று இரத்தினபுரி கேத்துமதி ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.
அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆறுகள், மலைகள் மற்றும் காடுகளை அதன் போக்கில் சுதந்திரமாக இருக்க விட்டால் இயற்கை அழிவுகள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் எதுவும் இடம்பெறாது. ஆனால், மனித செயற்பாடுகள் இயற்கைக்கு எதிராக உள்ளன என்றார்.
குறிப்பாக ஆறுகளை அதன் போக்கில் செல்லவிடாது அதனை வழிமறித்து வேறு திசையில் திரும்புகின்றனர். அதேபோல் மலைகளையும் மலைத்தொடர்களையும் காடுகளையும் அதன் போக்கில் இருக்க விடுவதில்லை.தவறான முறையில் அங்கு கட்டடங்களையும் வீடுகளையும் அமைக்கின்றனர். இதன் காரணமாக இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன. இயற்கை அனர்த்தம் ஏற்படுவதையும் அதனால் ஏற்படும் அழிவுகளையும் சேதங்களையும் குறைக்க அல்லது அதனை தடுக்க பொது மக்கள் தமது பங்களிப்புகளை வழங்க வேண்டும் என்றார்.
இயற்கை அனரத்தங்களையும் தடுக்க மனிதர்களிடையே நற்பண்புகள் தேவையாகும்.நமது வாழும் பிரதேசம் குறித்து தெளிவான விழிப்புணர்வுகளை கொண்டிருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அரசாங்கம் மற்றும் அரச அதிகாரிகளால் மட்டும் இயற்கை அனர்த்தங்களை தடுக்கவோ குறைக்கவோ முடியாது. பொது மக்கள் முன்வந்து தமது பங்களிப்புகளை செய்ய வேண்டும். இது குறித்து வெளியிடும் தகவல்கள், அறிவித்தல்கள், எச்சரிக்கைகள் ஆகியவற்றுக்கு அமைவாக செயற்படவேண்டும் என்றார்.
43 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago