Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
ஹட்டன் - நோட்டன் பிரதான வீதியில், செவ்வாய்க்கிழமை மாலை பாரிய ஆலமரத்தின் கிளையொன்று முறிந்து விழுந்ததால் தடைப்பட்டிருந்த போக்குவரத்து, சுமார் 6 மணித்தியாலங்களின் பின்னரே வழமைக்குத் திரும்பியதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் - சவூத்வனராஜா தோட்டம், முனீஸ்வரர் ஆலயத்துக்குச் சொந்தமான 100 வருடங்கள் பழைமைவாய்ந்த ஆல மரத்தின் கிளையொன்று, செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் முறிந்து, பிரதான வீதியில் விழுந்ததால், அவ்வீதி வழியான போக்குவரத்து சுமார் 6 மணித்தியாலங்கள் தடைப்பட்டது.
இதனால், முனீஸ்வரர் ஆலயம் பகுதியளவில் சேதமைடைந்ததுடன், தொலைபேசி கம்பமும் சேதடைந்தது.
மேலும் நோட்டன், ஒஸ்போன், லக்ஷபான ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்தும் முற்றாகத் தடைப்பட்டது.
இதனையடுத்து, ஹட்டன் பொலிஸாரும் நோர்வூட் பாதை அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களும் பிரதேசவாசிகளும் இணைந்து, கடும் பிரயத்தனத்தின் மத்தியில், இரவு 11.30 மணியளவில் மரக்கிளையை அப்புறப்படுத்தினர்.
போக்குவரத்து தடைப்பட்டமையால் பயணிகள், கால்நடையாகவே, தமது கிராமங்களுக்குச் சென்றனர்.
மலையகத்தில் சீரற்ற வானிலை நீடித்துவருவதால், இவ்வாறான பழைமைவாயந்த மரங்கள் முறிந்து விழக்கூடும் என்றும், எனவே, பாரிய மரங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
23 minute ago
1 hours ago
1 hours ago