2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Janu   / 2023 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி தனியார் பேருந்தில் பயணித்த 30 வயதுடைய கொனகல ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த  நபர் ஒருவரை  ஹல்துமுல்ல ஆரம்ப பாடசாலைக்கு அருகில் வைத்து ஹெரோயின்  மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் திங்கட்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவலை பொலிஸார்  தெரிவித்தனர்.

பண்டாரவளை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபரை  சோதனைக்கு உட்படுத்திய போது சந்தேகநபரிடம் இருந்து 3250 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 790 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபரை  பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது சந்தேக நபரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்

ராமு தனராஜா

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X