Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Janu / 2023 ஜூலை 12 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகத்திற்கு இடமான இடத்தினை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த16 கிராம் 710மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அத்தோடு கண்டி கன்னோருவ பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் மஹியங்கனை பிரதேசத்திற்கு லொக்கேஷனல் முறையில் போதைப்பொருள் விநியோகம் செய்து வருவதாகவும், இதற்காக இலங்கை வங்கிக்கு சொந்தமான கணக்கை பயன்படுத்தி, அந்த கணக்கில் பணம் செலுத்தி, உத்தரவு வரும் வரை குறிப்பிட்ட இடங்களில் ஹெரோயின் விற்பனை செய்வதாகவும் மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேகநபர் கண்டி, பேராதனை, கன்னோருவை, கெலிஓயா, ஹெட்டிபொல, வில்கமுவ ஆகிய பகுதிகளில் ஹெரோயின் விற்பனை செய்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
சந்தேகநபர் கைதுசெய்யப்பட்ட போது, அவரிடம் இருந்த போதைப்பொருளுக்கு மேலதிகமாக, சிறிய டிஜிட்டல் தராசு, இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago