R.Maheshwary / 2022 ஜூலை 31 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
கொழும்பு- காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என நுவரெலியா பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்து பொருள்களுக்கு சேதம் விளைவித்தமைக்கு எதிராகவே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்வதற்கு நுவரெலியா நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய குறித்த சந்தேகநபரை கைதுசெய்வதற்கு அவரது வீட்டுக்கு சென்ற பொலிஸார், அங்கு மேலும் 4 பேர் மறைந்திருப்பதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, அவர்களும் இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஐந்து சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பிங்கிரிய, கொதட்டுவ, களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
9 minute ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 Mar 2026