2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’போராட்டத்தை கைவிடுகிறோம் என்று அர்த்தமல்ல’

Nirosh   / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைக்கு செல்கிறோம் என்பது, போராட்டத்தை கைவிடுகிறோம் என்று அர்த்தமல்ல என முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் வே.தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், கடந்த 100 நாட்களுக்கு மேலாக அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு எதிரான போராட்டங்கள் இடைவிடாது உறுதியோடு முன்னகர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் பல்வேறு தந்திரோபாயங்களை இந்த நூறு நாட்களிலும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினுடைய வழிகாட்டலின் கீழ் ஆசிரிய, அதிபர்கள் முன்னெடுத்துள்ளனர் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சாதாரண கோரிக்கையாக தொடங்கப்பட்ட இந்த போராட்டம் அரசாங்கத்தினுடைய அசமந்தப் போக்காலும் தீர்க்கதரிசன மற்ற முடிவுகளாலும் இன்று மிகவும் இறுக்கமான ஒரு நிலைக்கு வந்தடைந்துள்ளது.  அரசாங்கத்தின் உயர்பீடத்தவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற  உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள்,  அனைவருமே ஆசிரியர்களின் போராட்டத்தை நசுக்கி விடலாம் என்று பல்வேறு வகைகளிலும் பல்வேறு வழிமுறைகளிலும் முயன்று தோற்று சரணடைந்து இருக்கின்றார்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள், போராட்ட இலக்கினை வென்றடையும் வரை போராட்டத்தை தொடர்ந்த வண்ணமே இருப்பார்கள் எனவும், அதற்கான மாற்று வடிவங்களை அவர்கள் காலத்திற்கு ஏற்பவும் மாறுகின்ற சூழலுக்கேற்பவும் கையெடுத்து வந்திருக்கிறார்கள். இந்த போராட்டத்தில் முதல் நாளிலிருந்தே  'முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் தொழிற்சங்கம்' ஈடுபாட்டோடும், உறுதியோடும் அதிபர் ஆசிரியர் கூட்டமைப்போடு இணைந்து பயணித்திருக்கிறது. இனியும் அனைத்து ஒத்துழைப்புக் களையும் நல்கி பயணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் முடிவின்படி பாடசாலைக்கு செல்லும் அதிபர் ஆசிரியர்கள் தமது தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டார்கள் என்பதாக அர்த்தப்படாது என்பதை அரசாங்கத்திற்கு நினைவுப் படுத்திக்கொள்ளும் அதே வேளை, அதிபர், ஆசிரியர்கள்
 இன்றைய தினம் பிற்பகல், நாடு முழுவதிலும் உள்ள பிரதான மற்றும் சிறு நகரங்களில்  தமது போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .