2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

போராட்டம் கைவிடப்பட்டது

Janu   / 2023 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெமேரியா A. தோட்ட தொழிலாளர்கள் தோட்ட காரியாலயத்தை டெமேரியா B தோட்த்துக்கு மற்றுவதற்குதுக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை (14) மற்றும் செவ்வாய்க்கிழமை (15) முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்து போராட்டம் புதன்கிழமை (16) கைவிடப்பட்டது 

இலங்கை தேசிய தோட்ட தொழிலார் சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம்  ஆகிய இரண்டு தொழில் சங்க பிரதிநிதிகள் இணைந்து தோட்ட நிர்வாகத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது தோட்ட நிர்வாகம் தோட்ட தொழிலாளர்களின் வேண்டுகோளை ஏற்று கொண்டதன் பின்னர் வேலை நிறுத்து போராட்டம் தோட்ட தொழிலாளர்களினாள் கைவிடப்பட்டது.

டெமேரியா A தோட்ட காரியாலயதை இடமாற்றம் செய்ய போவது இல்லை எனவும் கணக்காளர் பிரிவு மாத்திரம் கணக்காளர் இன்மையால் டெமேரியா B தோட்டத்துக்கு  மாற்றுவதாகவும் தோட்ட நிர்வாகம் கூறியுள்ளது அதற்க்கு இணக்கம் தெரிவித்த தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தை கைவிட்டதாக தொழில் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்

ராமு தனராஜா 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X